உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் - திமுகவினருக்கு அண்ணாமலை அறிவுரை


உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் - திமுகவினருக்கு அண்ணாமலை அறிவுரை
x

உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவரை பேச சொல்லுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

கடலூரில் அண்ணாமலையின் உருவபொம்மையை தெருவில் திமுக தொண்டர்கள் இழுத்துச் சென்றனர். பின்னர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அண்ணாமலை உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். அப்போது அண்ணாமலையின் உருவப் படம், உருவ பொம்மையை திமுகவினர் காலணியால் அடித்து ஆவேசத்தைக் காட்டினர். இந்தநிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவில்,

"போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் முதல்-அமைச்சர் நவ.4-ம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக தெறிந்துவிட்டது.

கோவை கார் குண்டு வெடிப்பு குறித்து வாய் திறக்க முதல்-அமைச்சர் யோசிக்கிறார். முஸ்லீம்கள் ஓட்டு வராது என்றெண்ணி ஓட்டுக்காக இச்சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்.

எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல்,கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவரை பேச சொல்லுங்கள் அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.



Next Story