தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

வேளாங்கண்ணி அருகே தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் பிரதாபராமபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் , தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை குறித்து பேசினர். முன்னதாக ஊராட்சி செயலாளர் கணபதி வரவேற்றார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஞானசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சவுரிராஜ், வேளாங்கண்ணி பேருர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story