அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர்கள்
திருச்சியில் தி.மு.க.சார்பில் நேற்று அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலைக்கும் அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவுக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இனிகோ.இருதயராஜ் எம்.எல்.ஏ., திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் பஸ் நிலையத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் கே.எம்.சிவ செல்வராஜ், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி. செல்வராஜ், தொட்டியம், காட்டுப்புத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறையில் அண்ணா சிலைக்கு் பழனியாண்டி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அல்லித்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.சரவணன், அதவத்தூர் கொடியரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கல்லக்குடி
கல்லக்குடியில் அண்ணா உருவப்படத்துக்கு லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் புள்ளம்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வடக்கு செல்வராசா, தெற்கு இளங்கோவன் தலைமையிலும், ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன் தலைமையிலும் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் கல்லக்குடி நகர தி.மு.க. செயலாளர் பால்துரை தலைமையிலும், புள்ளம்பாடி நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.