தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
x

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் கடையநல்லூர் குமந்தாபுரம் தனியார் மஹாலில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், நெல்லைக்கு வருகை தந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்-அமைச்சர் விழாவில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமான வாகனங்களில் செல்வது, 15-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது, தொகுதி வாரியாக பாசறை கூட்டங்களை இளைஞர் அணி சார்பில் நடத்துவது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், வடகரை பேரூராட்சி தலைவர் சேக் தாவூத், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், மதி மாரிமுத்து, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தென்காசி சேக் அப்துல்லா, கடையநல்லூர் சுப்பம்மாள் பால்ராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் கடையநல்லூர் ஐவேந்திரன் தினேஷ், தென்காசி கனகராஜ் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story