தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டம்
x

தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும், கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்திட வேண்டும், கரூர் காவிரி ஆற்றில் மணல் மற்றும் கல்குவாரிகளில் அனுமதியை மீறி அதிக அளவு எடுப்பதை தடுத்து கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும்.

கரூர் அமராவதி ஆற்றில் சாய கழிவுகளை கலப்பதை கண்டித்தும், விவசாய நிலத்தை அழிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும் நேற்று கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை எம்.முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக தொண்டரணி துணைச்செயலாளர் சாகுல் அமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கரூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, புறநகர் மாவட்ட அவைத்தலைவர் ரெங்கநாதன், மாநகர், மாவட்ட பொருளாளர் அனிதா ஆனந்த், புறநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் பழனிவேல், பெரியண்ணன், சபரிமணி பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் உஸ்மான், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, முன்னாள் மாநகர் மாவட்ட பொருளாளர் கலையரசன், குளித்தலை நகர செயலாளர் விஜயகுமார், கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்பட ஏராளமான தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் தெற்கு நகர செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story