காங்கிரஸ் கட்சியினருக்கு தீபாவளி பரிசு
காங்கிரஸ் கட்சியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீபாவளி பரிசுகளை வழங்கினார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் நேற்று பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தீபாவளி பரிசு வழங்கினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டபிள்யூ.ராஜசிங், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story