கால்வாய் அமைக்கும் பணியை கோட்ட பொறியாளர் ஆய்வு
திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் ரூ.3 கோடியில் கால்வாய் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை டவுன் வேட்டவலம் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இருந்து ரெயில்வே கேட் வரை சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.3 கோடியில் நடைபெற்று வருகின்றது. இப்பணியை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் க.முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கால்வாய் பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது உதவி பொறியாளர் ஆ.கலைமணி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story