திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்


திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
x

திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் கருணாநிதி வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் ஊரக சாலை மேம்பாடு குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான மாவட்ட ஊராட்சி குழுவின் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

மேலும் சிறப்பு தீர்மானமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக அயராது உழைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story