மாவட்ட அளவிலான தடகள போட்டி


மாவட்ட அளவிலான தடகள போட்டி
x

ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் வருகிற 2-ந் தேதி மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெறுகிறது

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் நடத்தும் முதல் இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வருகிற 2-ந் தேதி ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 14,16,18 மற்றும் 20 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகள் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பங்கேற்பார்கள்.

எனவே தங்கள் பள்ளி, கல்லூரியில் பயிலும் தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு மாவட்ட தடகள சங்க செயலாளர் எம்.சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story