புல் நறுக்கும் கருவி மானிய விலையில் வினியோகம்


புல் நறுக்கும் கருவி மானிய விலையில் வினியோகம்
x

புல் நறுக்கும் கருவி மானிய விலையில் வினியோகம் பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை

தீவன அபிவிருத்தி திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவி 50 சதவீதம் மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கிட 30 எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் முக்கியமானதாகும். இத்திட்டத்தின் நோக்கம் தீவன பற்றாக்குறையை சரிசெய்வது, தீவன விரையத்தை குறைப்பது, செரிமான சக்தியை அதிகப்படுத்துவதாகும். இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்யவேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலத்தில் தீவன சாகுபடி செய்தல் மற்றும் மின்வசதி உடையவராக இருத்தல் வேண்டும். கடந்த 10 வருடத்தில் இது போன்ற அரசு மானிய திட்டத்தில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது. எனவே, மேற்காணும் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிா்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story