நிலப்பிரச்சினையில் தகராறு; 18 பேர் மீது வழக்கு
தேனி அருகே நிலப்பிரச்சினை தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
தேனி அருகே கோபாலபுரத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அதே ஊரைச் சேர்ந்த தனலட்சுமி (50), மற்றொரு தரப்பை சேர்ந்த ரெங்கநாயகி, அவருடைய கணவர் சிவக்குமார், உறவினர்கள் குருமூர்த்தி, சரஸ்வதி, ஜெயந்தி ஆகியோர் காயம் அடைந்தனர். இருதரப்பிலும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ரெங்கநாயகி கொடுத்த புகாரின் பேரில், தனலட்சுமி உள்பட 7 பேர் மீதும், தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் உள்பட 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story