சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
x

சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பொதுமக்கள், புகார்தாரர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் காவல் துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்யும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிப்பதால், அந்த விவரங்களை வெளியிடும்போது, சாட்சிகள் கலைக்கப்படலாம். புலன் விசாரமைக்கு இடையூறு ஏற்படலாம். மேலும், போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளின் விவரங்களைத்தான் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது" என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போவதாக நீதிபதிகள் கூறினர். ஆனால், மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெறுவதாக கூறியதால், அதற்கு அனுமதி வழங்கி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story