பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி.


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும்  தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி.
x

புகாா் பெட்டி பகுதி.

ஈரோடு

அகற்ற வேண்டும்

ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முனிசிபல் காலனி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெருந்துறை அருகே உள்ள வடமுகம் வெள்ளோட்டில் கழிவுநீர் செல்லும் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கிக்கொண்டிருக்கிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. ஆகவே கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வடமுகம் வெள்ளோடு.

எாியாத தெருவிளக்கு

கொடுமுடியை அடுத்த எழுநூற்றிமங்கலம் அருகே குப்பம்பாளையம் பழனியாண்டவா் வீதியில் உள்ள தெருவிளக்கு எாியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. உடனே தெருவிளக்கை எாியசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கரன், குப்பம்பாளையம்.

வாகன ஓட்டிகள் சிரமம்

அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோட்டில் நத்தக்கடை பிரிவு என்ற இடத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடித்துவிட்டு் குழியை சரியாக மூடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். உடனே குழியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நத்தக்கடை பிரிவு.

சிக்னல் கம்பம் சேதம்

கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையத்தில் சிக்னல் கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் நிற்காமல் எதிர்எதிரே செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே சிக்னல் கம்பத்தை சாிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்செல்வி பிரேம்குமாா், நல்லகவுண்டன்பாளையம்

ஆபத்தான குழி

ஊஞ்சலூர் பஸ் நிறுத்தம் அருகில் கொளத்துப்பாளையம் பிரிவு சாலை செல்கிறது. இதன் அருகில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இதன் முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயை சரி செய்வதற்காக தார்சாலையை ஒட்டியவாறு 4 இடங்களில் குழி தோண்டினார்கள். ஆனால் குழியை மூடாமல் அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டார்கள். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஊஞ்சலூர்


Next Story