பெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

பெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரத்தில் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி, செடில் காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர்.

பின்னர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமி வீதி உலா நடந்து. விழா ஏற்பாடுகளை பெரியநாயகிபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story