பாரூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி


பாரூர் அருகே  ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
x

பாரூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி - தர்மபுரி சாலையில் மஞ்சமேடு உள்ளது. இங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் பலரும் குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் நேற்று முன்தினம் அங்கு வந்திருந்தனர். அதில் தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த அறிவழகன் (வயது 26) ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவரை தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள் அவரை தேடி வந்தனர். நேற்று 2-வது நாளாக டிரோன் மூலமாக தேடினார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story