காட்டுமன்னார்கோவில்திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காட்டுமன்னார்கோவில்திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் திரவுபதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாகுதி, மற்றும் 2, 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் 4-ம் கால யாக சாலை பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story