மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
திருப்பத்தூரில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பத்தூர் கிளை சார்பில் கம்பம் நடுதல், கம்பி இழுத்தல், விரிவாக்கப்பணிகள் செய்ய இ-டெண்டர் முறையில் வெளிஆட்களிடம் பணிகளை ஒப்படைப்பதை ரத்து செய்து தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக்கோரி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் சிவசீலன் தொடங்கி வைத்து பேசினார். மதன்குமார் தலைமை தாங்கினார். அருண்குமார், அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் தண்டபாணி, செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஜோதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story