மகனிடம் இருந்து வீட்டை மீட்டு கொடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா


மகனிடம் இருந்து வீட்டை மீட்டு கொடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா
x

மகனிடம் இருந்து வீட்டை மீட்டு கொடுக்கக்கோரி ஈரோடு கலெக்டா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு


மகனிடம் இருந்து வீட்டை மீட்டு கொடுக்கக்கோரி ஈரோடு கலெக்டா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணா போராட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூக நலத்துறை தனித்துணை கலெக்டர் குமரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நம்பியூர் தாலுகா தாழ்குனி பகுதியை சேர்ந்த தனராஜின் மனைவி ராஜமணி (வயது 78) மற்றும் 2 பெண்கள் கலெக்டா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டா் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மகன் மீது புகார்

இதில் ராஜமணி கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது கணவருக்கு சொந்தமான வீட்டில் 3-வது மகன், மருமகளுடன் வசிக்கிறேன். என்னை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறுகிறார்கள். சரியாக உணவு கொடுப்பதில்லை. இரவில் வீட்டுக்கு வெளியே தூங்கும்படி மகனும், மருமகளும் கூறிகின்றனர். எனக்கு வயதாகிவிட்டதால் என்னால் தன்னிச்சையாக வேலை செய்ய முடியவில்லை. எனவே எனது மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

ரூ.4½ லட்சம்

இதேபோல் கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் அருகே முருங்கைகாட்டை சேர்ந்த ஆரப்பகவுண்டரின் மனைவி பழனியம்மாள் (75) கொடுத்த மனுவில், "திங்களூர் அருகே சின்னவீரசங்கிலியில் எனக்கு நத்தம் பட்டா நிலம் உள்ளது. கடந்த 50 ஆண்டாக அங்கு வசித்து வந்தேன். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்ததால் எனது மகனுடன் வசித்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் எனது தோட்டத்தில் குடிசை அமைத்து வசிக்கிறேன். எனது மகன் உணவு கொடுப்பதில்லை. எனக்கு உடல்நிலை சரி இல்லாததால் எனது மகள் வீட்டில் கடந்த 6 மாதமாக வசிக்கிறேன். அங்கும் என்னை வசிக்க விடாமல் செய்கின்றனர். எனது குடிசை வீட்டை பூட்டிவிட்டு நான் வைத்திருந்த சேமிப்பு பணமான ரூ.4½ லட்சத்தையும் எடுத்து சென்றுவிட்டனர். எனவே எனது பணத்தையும், வீட்டையும் மீட்டு கொடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.


Next Story