தர்ம சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்


தர்ம சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
x

தர்ம சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம், கண்ணங்காரக்குடி கிராமத்தில் தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பதால் பழங்கால தொல்லியல் கட்டிடக்கலை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டது. இங்கு தர்ம சாஸ்தா, அழகு கருப்பர், ஆஞ்சநேயர், மலையாள பகவதி, அழகுநாச்சி, பத்ரகாளியம்மன், கருவேப்பிலை காளியம்மன், அடைக்கலம் காத்தார், சின்ன கருப்பர், கன்னிமூல விநாயகர் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும், கோபுர விமானங்களுக்கும், கொடி மரத்திற்கும் திருப்பணிகள் நிறைவுற்றது. இதனை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 13-ந்தேதி இரவு கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. கும்பாபிஷேக மலரை கணபதி செட்டியார் வெளியிட அழகப்பன் செட்டியார், சேது குமணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இரவு இப்போதைய குடும்பங்கள் மதுரையா? சிதம்பரமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பூர்ணா புஷ்ப கலை சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு தர்ம சாஸ்தா, விநாயகர், சுப்பிரமணியர் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியாளர்கள் சிதம்பரம் செட்டியார், அழகப்ப செட்டியார், மற்றொரு அழகப்ப செட்டியார், பழனியப்பன் செட்டியார், சோமசுந்தரம் செட்டியார், கணபதி செட்டியார், கதிரேசன் செட்டியார் மற்றும் உபயதாரர்கள், தர்மசாஸ்தா நற்பணி மன்றத்தினர் கண்ணங்காரக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் மெய் அன்பர்கள் செய்து இருந்தனர்.


Next Story