ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் பாராட்டு


ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் பாராட்டு
x

சாலை ஓரத்தில் ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசாரை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணி செய்பவர் இளவரசி. இவர் கடந்த17-ந் தேதி இரவு பணியில் இருந்த போது,போலீஸ் நிலையம் எதிரில் சாலை ஓரமாக ஆதரவற்ற நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார்.

இதை அறிந்த ஏட்டு இளவரசி, பெண் போலீஸ் சாந்தி துணையுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபனும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து வந்து துணை புரிந்தார்.

பெண் போலீஸ் உதவியுடன் அந்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் அந்த பெண், குழந்தையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதில் மனித நேயத்துடன் செயல்பட்டு ஆதரவற்ற அந்த பெண் குழந்தை பெற உதவி செய்த ஏட்டு இளவரசி, பெண் போலீஸ் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.


Next Story