ஜெயங்கொண்டத்தில் 1,200 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ஜெயங்கொண்டத்தில் 1,200 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
அரியலூர்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 1,200 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story