காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம்
தொண்டி,
தொண்டி அருகே உள்ள பெருமானேந்தல் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தொண்டி சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Related Tags :
Next Story