பக்தர்கள் பால்குட ஊர்வலம்


பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் 13-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் இருந்து அம்மனுடைய சூலாயுதம் மற்றும் போயர் சமுதாய மகளிர் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர். 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அன்னப்பட்சி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார்.இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story