பக்தர்கள் பால்குட ஊர்வலம்
களப்பாளங்குளம் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அருகேயுள்ள களப்பாளங்குளம் மகாசக்தி காளியம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. நேற்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து கழுகுமலை ஆறுமுகம் நகர் பிள்ளையார் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக களப்பாளங்குளம் சென்றனர். மகாசக்தி காளியம்மனுக்கு காலை 11 மணியளவில் பாலாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. நாளை மாலை 5 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story