வளர்ச்சி திட்டப்பணிகள்


வளர்ச்சி திட்டப்பணிகள்
x

பாபநாசம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.2 கோடி 12 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபணிகளை சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள், திடக் கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும், வரி மற்றும் வரையற்ற இனங்கள் வசூல் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

இதை தொடர்ந்து கலைஞர் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மின்மயான பணிகள், அரையபுரத்தில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை பணிகள், வளம் மீட்பு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் கருப்பையா, உதவி செயற்பொறியாளர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story