துணை போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு
நெல்லை மாநகர தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிட துணை போலீஸ் கமிஷனராக அனிதா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மூலம் காவல் பணிக்கு தேர்வானார். இவர் ஊட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும் பணியாற்றி உள்ளார்.
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர தலைமையிட துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Related Tags :
Next Story