கட்டிடவியல் துறை கருத்தரங்கம்


கட்டிடவியல் துறை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை கருத்தரங்கம் நடந்தது.

தென்காசி

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாணவர் இம்மானுவேல் வரவேற்று பேசினார்.

சிவகாசி மெப்கோ சிலேங் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரைட் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவர் ஆன்டோ நவின்பால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கட்டிடவியல் துறைத்தலைவர் குளோரி செல்வமனோ ஆலோசனையின்பேரில், இணை ஒருங்கிணைப்பாளர் சக்தி மரகதம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story