பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 7 Oct 2023 1:15 AM IST (Updated: 7 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் வீடுகள் தோறும் சுகாதார பணியாளர்கள் சென்று, கொசுப்புழுக்களை அழிக்க மருந்து வழங்கி வருகின்றனர். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதற்கு ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி ஆகியோர் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம், கொசுக்கள் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினர். டெங்கு காய்ச்சல், ஏடிஸ் கொசுக்கள் தொடர்பான கண்காட்சியும் நடந்தது.


Next Story