மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் ஜின்னா ரோடு 2-வது சந்து அருகில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் டி.ஜாபர்சாதிக் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ரங்கன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் பகுதியில் தரமற்ற சாலைகளை அமைத்து வரும் திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்தும், திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளதை கண்டித்தும் தெருக்களில் குப்பைகள் கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் தாலுகா செயலாளர் காசி, கேசவன், ஜோதி, ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story