டிரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்


டிரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்
x

டிரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

டிரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டாரம் சு.வாளவெட்டி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் கரும்பு பயிரில் நானோ யூரியா மற்றும் நானோ டீ.ஏ.பி. உரங்களை டிரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

செயல்விளக்கத்தை தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் பயிற்சியில் டுரோன் தொழில் நுட்பம் மற்றும் நானோ யூரியா மற்றும் நானோ டீ.ஏ.பி. உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ''நானோ உரங்களை டிரோன் மூலம் தெளிப்பதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது. மேலும் நானோ உரங்கள் இலை வழி தெளிக்கப்படுவதால் மண் மற்றும் நீர் நிலைகள் மாசுவடுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதின் மூலம் விளைச்சல் ஏதும் குறையாது. செலவினைக் குறைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு நானோ உரங்கள் மற்றும் டிரோன் தெளிப்பு உள்பட ஒரு முறைக்கு ஏக்கருக்கு ரூ.1,700 வரை செலவாகும்'' என்று தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள் மானிய விலையில் வினியோகிக்கப்பட்டன.இதில் வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், இப்கோ உரநிறுவன மாநில விற்பனை மேலாளர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story