கிராம கோவில் பூசாரிகள் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்


கிராம கோவில் பூசாரிகள் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2023 1:00 AM IST (Updated: 21 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

நல வாரியத்தை சீர்படுத்த வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராம கோவில் பூசாரிகள்

விசுவ இந்து பரிஷத் மற்றும் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில இணை அமைப்பாளர் சிவமகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராமகோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவுக்கு பின், அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும் போது,' தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சம்பளம் வழங்க வில்லை. எனவே கிராம கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும்' என்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மண்டல அமைப்பாளர் பிரகாஷ், விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் சிவக்குமார், முருகன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story