ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

குடவாசலில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், காஞ்சீபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை மிரட்டியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை வட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், மகளிர் அணி கமலா ஆகியோர் பேசினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பணி மேற்பார்வையாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story