ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு,விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குருநாத்பிரபுவை பணிநீக்கம் செய்த விருதுநகர் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது பிற துறை பணிகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதை கைவிட வலியுறுத்தியும், பணிநீக்கம் செய்யப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும் கோஷமிட்டனர். மாவட்ட துணை செயலாளர் சிங்காரவேலு, மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார், கொள்ளிடம் வட்டாரத் தலைவர் சாமியப்பன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story