சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல், வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் கவிதா வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தமிழரசன், மாவட்ட தலைவரும் மாநில தணிக்கையாளருமான சித்ரா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்கும் பணியை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாலா நன்றி கூறினார்.

இதேபோல் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் செல்வராணி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவா் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். சங்க பொறுப்பாளா் செந்தமிழ்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

முடிவில் சத்துணவு அமைப்பாளா் உஷா நன்றி கூறினார்.


Next Story