திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தேனியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி

வங்கி எழுத்தர் பணிக்கான தேர்வுகளில் தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

இதில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், ஜெய்பீம் புரட்சி புலிகள் இயக்க தலைவர் அருந்தமிழரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற அறிவிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story