மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பசுவை பாரதி தலைமை தாங்கினார். மாநில நிதிச்செயலாளர் பெருமாவளவன் கண்டன உரை ஆற்றினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தனபால், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்கவி உள்பட பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story