வாகனம் மோதி மான் சாவு


வாகனம் மோதி மான் சாவு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் - தென்காசி சாலையோரத்தில் ராமர் கோவில் மலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மான்கள் மற்றும் காட்டுபன்றிகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வருகின்றன.

நேற்று அதிகாலை சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தென்காசி சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மானின் மீது மோதி விட்டு சென்றுவிட்டது. இதில் அந்த மான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து இறந்த மானை அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர்.


Next Story