தீபாவளி நாளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குகள் இல்லை
தீபாவளி நாளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குகள் இல்லை
ஈரோடு
ஈரோடு
தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகள் வெடிக்க காலை மற்றும் இரவில் தலா ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேர கட்டுப்பாடு அளித்து இருந்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதுபோல் கடந்த ஆண்டு விதிகள் மீறியதாக பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் பட்டாசுகளை விதிமுறை மீறி வெடித்ததாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story