இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது- பஸ், ரெயில் நிலையங்களிலும் பயணிகள் குவிந்தனர்


இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது- பஸ், ரெயில் நிலையங்களிலும் பயணிகள் குவிந்தனர்
x

இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ், ரெயில் நிலையங்களிலும் பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு


இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ், ரெயில் நிலையங்களிலும் பயணிகள் குவிந்தனர்.

மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகளை வாங்குவதற்காக ஈரோடு கடைவீதிகளில் மக்கள் அலைகடலென திரண்டனர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜிரோடு வழியாக செல்வதற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. மணிக்கூண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நடுரோட்டிலேயே ஜவுளிக்கடை அமைத்து விற்பனையை வியாபாரிகள் நடத்தினர். எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாகவே காணப்பட்டது. ஈரோடுஆர்.கே.வி.ரோட்டில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பணம், நகை திருடுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். யாராவது கைவரிசை காட்டுவதற்கு முன்பு சுதாரித்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கண்காணிப்பு

ஈரோடு மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 6 இடங்களில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. அதன்மீது போலீசார் ஏறி நின்று கண்காணித்தனர்.

மேலும், முக்கிய இடங்களில் நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டார்கள். போலீசார் மாறுவேடங்களில் சென்றும் கண்காணித்தனர். இதேபோல் பட்டாசு விற்பனையும் மும்முரமாக நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிய பட்டாசு ரகங்களை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. இதனால் சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி சென்றார்கள்.

சிறப்பு பஸ்கள்

தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

நேற்றும் ஏராளமான பயணிகள் கூடியதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்பட்டது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கடந்த 3 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story