பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சரோஜா (வயது 40). வீட்டில் இருந்தபடி டெய்லர் வேலை செய்து வருகிறார். மாரிமுத்து கேரளாவில் டெய்லராக உள்ளார்.
இந்த நிலையில் சரோஜா கடந்த 9-ந் தேதி இரவு 9 மணியளவில் தனது வீட்டருகே உள்ள கழிப்பறைக்கு சென்றார்.
அப்போது ஒருவர் செடிகளுக்கு மத்தியில் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். யார் என்று பார்த்தபோது அது பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் முருகேஷ் (22) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் முருகேஷ், சரோஜாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தபடி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சரோஜா மானூர் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து முருகேசை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story