வாலிபருக்கு கொலை மிரட்டல்
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (வயது 21). நேற்று கோவில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக அங்குள்ள மாரியம்மன் கோவில் வழியாக நடந்து சென்றார். அப்போது சுத்தமல்லியை சேர்ந்த முத்துக்குட்டி மகன் முருகன் (25) உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து முத்துகிருஷ்னணை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து அதில் ஒரு சிறுவனை கைது செய்து நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story