ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை


ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை
x

ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.

மதுரை

ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.

ஆடல்-பாடல் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வரியேந்தல் கிராமத்தை சேர்ந்த மாதவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்"் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது-.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, "மனுதாரர் கிராமத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்துவதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது" என உறுதியளித்தார்.

7 மணி முதல் 10 மணி வரை

முடிவில் நீதிபதி, கோவில் விழாவையொட்டி நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் நடத்தலாம். ஆபாச நடனம் இருக்கக்கூடாது. கவர்ச்சியான, ஆபாசமான உடைகளை அணியக்கூடாது. அரசியல் கட்சி, சாதி, மதம் சம்பந்தமான பேச்சுகள் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எந்தவித போதைப்பொருளையோ, மதுபானமோ அருந்தியிருக்கக்கூடாது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்தான் பொறுப்பாவார்கள்.

விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால் சம்பந்தப்பட்ட போலீசார் சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கேட்ட வழக்குகளிலும் இதுபோன்ற உத்தரவுகளை இதே நீதிபதி பிறப்பித்தார்.


Next Story