சாலையில் பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு


சாலையில் பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x

சாலையில் பழுதான லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மண்முத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலை தோட்ட பகுதியில் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத்திலிருந்து நாள்தோறும் லாரியின் மூலம் தேயிலை பொருட்கள் விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் தேயிலை பொருட்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று காக்காச்சி அருகே வந்தபோது திடீரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது.

இதனால் அரசு பஸ்கள் நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

ஆனால் மற்ற பயணிகள் செல்ல முடியாததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தோட்ட மேலாளரிடம் பகுதி கவுன்சிலர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.


Related Tags :
Next Story