'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை

திண்டுக்கல் கிழக்குரதவீதியில் கடந்த பல வாரங்களாக குப்பைகள் அள்ளிச்செல்லப்படவில்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு அப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், திண்டுக்கல்.

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

போடி தாலுகா மஞ்சிநாயக்கன்பட்டியை அடுத்த வலையபட்டி மேற்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-முருகன், போடி.

மயானத்துக்கு செல்ல பாதை வேண்டும்

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் 12-வது வார்டு மணியக்காரன்பட்டியில் உள்ள மயானத்துக்கு செல்ல பாதை வசதி செய்யப்படவில்லை. மேலும் மயானத்தில் எரியூட்டும் மேடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மயானத்துக்கு செல்ல பாதை அமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத், மணியக்காரன்பட்டி.

பஸ் நிறுத்த கட்டிடம் ஆக்கிரமிப்பு

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பஸ் நிறுத்த கட்டிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, பஸ் நிறுத்த கட்டிடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிசெல்வம், பழனி.


Next Story