தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சீரமைக்கப்பட்டது

அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையில் செவரக்கோடு அருகே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அதன் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையின் நடுவே உயரமாக அமைந்திருந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி புகார்பெட்டி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைைய சீரமைத்து குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் உயரத்தை குறைந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் ஆபத்து

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழியில் சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையோரம் ெதாட்டி போன்று அமைத்து அதன்மேலே காங்கிரீட் மூடி போடப்பட்டுள்ளது. தற்போது காங்கிரீட் மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காங்கிரீட் உடைந்த பகுதியில் விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.சுபின், பேயன்குழி.

சாலையை சீரமைக்க வேண்டும்

மேலகிருஷ்ணன்புதூர் அருகே காளியாயன்விளையில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த ஊரில் உள்ள சாலையில் தினமும் ஏராளமான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் செல்கின்றன. ஆனால் சாலை மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர். சுரேஷ் பென்னேசன், காளியாயன்விளை.

படித்துறையை சீரமைக்க வேண்டும்

அ௫விக்கரை ஊராட்சியில் பரளியாறு பாய்கிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்காக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த படித்துறை சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், குளிப்பதற்காக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி படித்துறை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செ.அர்ஜூன் ராம், அருவிக்கரை.

பழுதடைந்த தெருவிளக்கு

திட்டுவிளையில் இருந்து மனதிட்டை செல்லும் சாலையில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தியுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. மேலும், இந்த தெருவிளக்கு கம்பத்தில் இருந்து விடுபட்டு தொங்கிய நிலையில் காணப்படுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய்மணியன், மனதிட்டை.

வாகன ஓட்டிகள் அவதி

கொல்லங்கோடு நகராட்சியில் சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் சாலையில் வளைவுகள் அதிகமாக உள்ளது. மேலும் சத்திரகாவு பிரிவு சாலையில் இருந்து வரும்போது, இந்த சாலையின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால் சாத்திரகாவு சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்திரகாவு செல்லும் சாலையின் மேடான பகுதியை சாய்வாக சீரமைக்க வேண்டும்.

-சிவகுமார், கொல்லங்கோடு


Next Story