'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

எரியாத தெருவிளக்கு

எரியோடு பழைய தபால் அலுவலக தெருவில் கோவில் அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் மக்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். அந்த தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.

-பெரியசாமி, எரியோடு.

சேதமடைந்த சாலை

பழனி இட்டேரி சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அறிவாசான், மானூர்.

சேறும், சகதியுமான சாலை

வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை ஊராட்சியில் சேர்வைக்காரன்பட்டி வழியாக சிக்குபோலாகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-சண்முகவேல், சிக்குபோலாகவுண்டன்பட்டி.

அரசு பஸ்சில் இருக்கை சேதம்

திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் அரசு பஸ்சில் பின் இருக்கை சேதம் அடைந்து கம்பி மட்டுமே இருக்கிறது. அதில் பயணிகள் அமர முடியாமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டியது இருக்கிறது. அந்த இருக்கையை சரிசெய்ய வேண்டும்.

-சிவசக்தி, ஏ.வெள்ளோடு.

சாலையில் தேங்கிய மழைநீர்

திண்டுக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாலை சேதம் அடைந்து பள்ளம் உருவாகிவிட்டது. அதில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும்.

-ரெங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

மழைநீர் சேமிப்பு தொட்டி

உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் அம்பேத்கர்நகரில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே கிடக்கிறது. அந்த பள்ளத்தில் சிறுவர்கள், கால்நடைகள் விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் சேமிப்பு தொட்டியை விரைவாக கட்ட வேண்டும்.

-தங்கபாண்டி, காமாட்சிபுரம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

தேனியில் முக்கிய சாலைகளில் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன. அவை வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, வாகன ஓட்டிகளை விபத்திலும் சிக்க வைக்கின்றன. எனவே விபத்தை தவிர்க்க மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.

-கணேசன், தேனி.

சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்

தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வசந்தன், தேனி.

வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சாளாறு அணையில் இருந்து செல்லும் பிரதான் வாய்க்கால்கள் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அணையில் இருந்து பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே பாசன வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிமாறன், தேவதானப்பட்டி.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story