'மாண்டஸ்' புயல் - மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் : தமிழக அரசு வேண்டுகோள்


மாண்டஸ் புயல் - மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் : தமிழக அரசு வேண்டுகோள்
x

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது .

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது .

மேலும் பால் ,காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்ககைளை மக்கள் முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டும்.கடற்கரைக்கு செல்வதையும் ,பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.நீர்நிலைகளின் அருகிலும் ,திறந்த வெளியில் செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.என தமிழக அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story