டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி- போலீஸ் விசாரணை
டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாட்டு துப்பாக்கி மீட்பு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் வனப்பகுதியில் வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் நேற்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீசார் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கீழே ஒரு நாட்டு துப்பாக்கி கேட்பாரற்று கிடந்தது. உடனே அந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
வேட்டையாட...
நாட்டு துப்பாக்கி கிடந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. எனவே யாரோ வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வந்திருக்கலாம்.
அப்போது ஆட்கள் அல்லது வனத்துறையினர் நடமாட்டம் இருப்பதை கண்டு துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.