முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு:பா.ஜனதா கவுன்சிலர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ேபசிய பா.ஜனதா கவுன்சிலர் ைகது ெசய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
நாகர்கோவில், பிப்.19-
தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (வயது 32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. வக்கீல் கோடீஸ்வரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.
--
Related Tags :
Next Story