ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கோனேரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
சேலம்
தேவூர்:-
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கோனேரிபட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. கோனேரிபட்டி, தேவூர், அம்மாபேட்டை ஊமரெட்டியூர், குள்ளம்பட்டி, செங்கானூர், பூமணியூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர் கொட்டாயூர், நல்லதங்கியூர், கல்வடங்கம், சென்றாயனூர், ஒடசக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6,069 முதல் ரூ.7,379 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.3,606 முதல் ரூ.4,999 வரை விற்பனை ஆனது. மொத்தம் 736 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story